ADDED : அக் 14, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட மரக்கட்டா வனப்பகுதியில், 3 யானைகள் தனியாக முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 3 யானைகள் ஒட்டர்பாளையம் கிராமத்திற்குள் புகுந்து, விவசாயி அனுமந்தப்பா, 54, என்பவரது நிலத்தில் சாகுபடி செய்திருந்த ஒரு ஏக்கர் தக்காளி மற்றும் நெல் பயிரை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன.
அதேபோல், வேறு சில விவசாயிகளின் ராகி தோட்டங்களை சேதப்படுத்தின. நேற்று காலை நிலத்திற்கு சென்ற விவசாயிகள் அதிர்ச்சியடைந்தார். வனத்துறையினர், சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.