/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
/
கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
ADDED : ஏப் 17, 2024 01:57 AM
கிருஷ்ணகிரி:தமிழகத்தில் வரும், 19ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அன்று பொது விடுமுறை அளிக்க,
தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை
பொருத்தவரை, தென் மாவட்டங்களை சேர்ந்த பலர், தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள்
விசேஷ நாட்கள் மற்றும் தேர்தல் நேரத்தில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வது
வழக்கம். தற்போது, தேர்தல் நடக்கும் அடுத்த நாள் சனிக்கிழமை விடுமுறை
எடுத்துள்ளனர். ஞாயிறு விடுமுறை என்பதால், சொந்த ஊரில், 3 நாட்கள்
இருக்க முடிவு செய்து, ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் பஸ் ஸ்டாண்டுகளில் நேற்று மாலை முதல், வெளியூர் செல்ல பயணியர்
கூட்டம் அதிகரித்தது. மேலும் இன்று, 17ம் தேதி கூட்டம் மேலும்
அதிகரிக்கும் சூழல் உள்ளதால், கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டுமென,
கோரிக்கை விடுத்துள்ளனர்.