/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டும் திறக்கப்படாத தினசரி சந்தை
/
கிருஷ்ணகிரியில் ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டும் திறக்கப்படாத தினசரி சந்தை
கிருஷ்ணகிரியில் ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டும் திறக்கப்படாத தினசரி சந்தை
கிருஷ்ணகிரியில் ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டும் திறக்கப்படாத தினசரி சந்தை
ADDED : ஜூன் 13, 2025 01:17 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகரில் வியாபாரிகள், விவசாயிகள் நேரடியாக கடைகளில் விற்பனை செய்யும் வகையில், 1.10 கோடி ரூபாய் அளவில் கட்டப்பட்ட கடைகள் திறக்கப்படாமல்
உள்ளன.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டையில், சுற்றுவட்டார விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், பூ மற்றும் இதர பொருட்களை தினந்தோறும் விற்று வருகின்றனர். அவர்கள், சந்தைப்பேட்டையிலும், கே.தியேட்டர் சாலை, கோ ஆப்பரேட்டிவ் காலனி, ஆனந்த் தியேட்டர் சாலை மற்றும் பெங்களூரு சாலைகளில் தினந்தோறும், அதிகாலை நேரத்தில் சாலையிலும் அமர்ந்து வியாபாரம் செய்து வந்தனர்.
அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் சந்தைப்பேட்டையில் உள்ள தினசரி சந்தை இயங்கும் இடத்தில், ஷட்டர்களுடன் கூடிய, 19 கடைகள், ஷட்டர் இல்லாமல், 54 கடைகள் என, 73 கடைகள் கட்ட நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 1.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கடந்த, 2023, டிச., 27ல் பணிகள் துவங்கப்பட்டன.
பணிகள் முடிவடைந்து கடந்த, 2024, டிச.22ல், புதிதாக கட்டப்பட்ட கடைகளை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி திறந்து
வைத்தார்.
தினசரி சந்தை கடைகள் திறக்கப்பட்டு, 6 மாதங்கள் ஆகியும் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. மேலும் சாலைகளிலேயே வியாபாரிகள் தினந்தோறும் கடைவைப்பதும், குப்பைகள் தேங்குவதும் வாடிக்கையாகி உள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'சாலைகளில் வைக்கும் கடைகளுக்கும் நகராட்சி கட்டணம் வசூலிக்கிறது. எங்களுக்காக கட்டப்பட்ட கடைகளை திறக்காமல் வைத்துள்ளது. கடைகள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் டெண்டர் விடவில்லை. எங்களுக்கு கடைகளை ஒதுக்க கோரி மனு அளித்தும், டெண்டர் விடக்கோரி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் நடவடிக்கை இல்லை. அதேபோல பஸ் ஸ்டாண்ட் நுழைவு கட்டணம், வாரச்சந்தை உள்ளிட்டவற்றிற்கும் டெண்டர் விடாமல் நகராட்சி மெத்தனம் காட்டுகிறது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்து முறையாக டெண்டர் வைத்து, ஏழை விவசாயிகள், வியாபாரிகளுக்கு கடைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்,' என்றனர்.