/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மருத்துவமனை சுவரில் நீர் கசிவால் ஆபத்து
/
மருத்துவமனை சுவரில் நீர் கசிவால் ஆபத்து
ADDED : ஜூன் 19, 2025 01:22 AM
கெலமங்கலம், கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும், 350க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு, பிரசவம் பார்க்கும் அறை மற்றும் பிரசவ வார்டு, எக்ஸ்ரே அறை ஆகியவற்றின் கட்டடம் மிகவும் மோசமாக இருந்ததால், 13.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி துவங்கப்பட்டு, 15 நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது. மருத்துவமனை நிர்வாகத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், சீரமைப்பு பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
தரமில்லாமல் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால், பிரசவ அறை மற்றும் எக்ஸ்ரே அறைகளின் சுவர்களில் தண்ணீர் கசிகிறது. மின்வினியோகமுள்ள இப்பகுதியில் தண்ணீர் கசிவதால், சுவற்றில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. நோயாளிகள், டாக்டர்கள், செவிலியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், மாவட்ட கலெக்டர் தலையிட்டு, தரமான முறையில் சீரமைப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.