ADDED : டிச 05, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் பகுதியில், 12 ஏக்கர் பரப்ப-ளவில் பட்டாளம்மன் ஏரி உள்ளது. இதை சுற்றி
ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக உள்ள இந்த ஏரியில்,
தொழிற்சாலை, கேன்டீன் கழி-வுகள் கலப்பதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில் ஏரியில் நேற்று
ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து துர்நாற்றம் வீசியது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம், ஏரி நீரை ஆய்வு செய்து, உண்மை தன்மையை
கண்டறிய, கோவிந்த அக்ரஹாரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.