தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு தீர்மானம்
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு தீர்மானம்
ADDED : நவ 16, 2026 03:34 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு ஓட்டலில், தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம் சார்பில், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் இணைப்பு விழா நடந்தது. தொழிற்சங்க மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் உமேஷ்குமார், துணை செயலாளர் குட்டிப்புலி குமார், கட்டுமான தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு மற்றும் நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
ஓசூரிலுள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் வழங்க வேண்டும். நலவாரிய சலுகைகள் அனைத்தும், தொழிலாளர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில தொழிற்சங்க செயலாளர் சிதம்பரம், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், மாநில துணை பொதுச்செயலாளர் நெப்போலியன், மாவட்ட செயலாளர் கார்த்திக் சீனிவாஸ், பொறுப்பாளர் கல்பனா உட்பட பலர் பங்கேற்றனர்.
