/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கருணாநிதி நினைவுநாளையொட்டி அமைதி ஊர்வலம் நடத்த தீர்மானம்
/
கருணாநிதி நினைவுநாளையொட்டி அமைதி ஊர்வலம் நடத்த தீர்மானம்
கருணாநிதி நினைவுநாளையொட்டி அமைதி ஊர்வலம் நடத்த தீர்மானம்
கருணாநிதி நினைவுநாளையொட்டி அமைதி ஊர்வலம் நடத்த தீர்மானம்
ADDED : ஆக 05, 2025 01:21 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், ஓசூரில் தளி சாலையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாநகர செயலாளர் மேயர் சத்யா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு இம்மாதம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும், தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில், வரும், 7ம் தேதி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, மாநகர, ஒன்றிய, பேரூர் பகுதிகளில், அவரது உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்த வேண்டும். அதே நாளில், மாவட்ட, தி.மு.க., சார்பில், ஓசூர் ராம்நகரில் துவங்கி, தாலுகா அலுவலக சாலையிலுள்ள அண்ணாதுரை சிலை வரை அமைதி ஊர்வலம் செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் சுகுமாறன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.