/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'வெள்ள பாதிப்பை தடுக்க 40 புதிய திட்டங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்த முடிவு'
/
'வெள்ள பாதிப்பை தடுக்க 40 புதிய திட்டங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்த முடிவு'
'வெள்ள பாதிப்பை தடுக்க 40 புதிய திட்டங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்த முடிவு'
'வெள்ள பாதிப்பை தடுக்க 40 புதிய திட்டங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்த முடிவு'
ADDED : டிச 05, 2024 07:07 AM
கிருஷ்ணகிரி''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை தடுக்க, 40 புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்-ளது,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை
அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் அமைச்சர் முத்துச்சாமி தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு,
எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன், பிரகாஷ் முன்னிலை
வகித்தனர். கூட்டத்திற்கு பின், அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதா-வது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த,
2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தோம். ஊத்தங்-கரை பகுதியில், 52
ஆண்டுகளுக்கு பிறகு அதி கனமழை பெய்-துள்ளது. இது எப்போதும் நடப்பதல்ல. ஊத்தங்கரையில்
வாக-னங்கள் அடித்துச் செல்லப்பட்ட பகுதியில் சிறுபாலம், ஆக்கிர-மிப்புகள் அகற்றம், புதிய வீடுகள் கட்டி
கொடுத்தல் உட்பட, வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், 40 புதிய திட்டங்-களை அமல்படுத்த முடிவு
செய்துள்ளோம். இது குறித்து கலெக்டர் சரயு அறிக்கை தயார் செய்து, தமிழக முதல்வரிடம் விரைவில் வழங்குவார்.
தற்போதைய வெள்-ளத்தில், 607 குடும்பங்கள் பாதித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மாவட்டத்தின், 7 முகாம்களில் தங்கியிருந்த, 1,500க்கும் மேற்பட்டோரில், 6 முகாம்களில்
தங்கியிருந்தவர்கள் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். கால்நடைகள், பயிர் பாதிப்பு குறித்து, தொடர்ந்து
கணக்கெடுப்பு பணி நடக்கிறது. அது முடிந்த பின், தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் அபாயகரமான இடத்தில் மக்கள் தங்கியுள்ளனர்.
அவர்களுக்கு அரசே பாதுகாப்-பான மாற்றிடம் ஒதுக்க முடிவு செய்துள்ளது. வெள்ளம் வடிந்த பின் மீண்டும்
அபாயகரமான பகுதிகளில் மக்கள் குடியேறுவதை தவிர்க்க வேண்டும்.அரசு தரும் மாற்றிடங்களில் குடிபெயர்ந்தால், உங்களுக்கென ஒரு சொத்து கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். வெள்ளத்தில்,
உடைமைகளை இழந்தவர்கள், தகவல்களை தெரிவிக்க, நடத்தப்படும் முகாம்-களில், பொதுமக்கள் தங்கள்
இழப்புகளை பதிவு செய்யலாம். இவ்வாறு, அவர் கூறினார்.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்-ணகிரி நகராட்சி தலைவர் பரிதாநவாப் மற்றும்
பலர் உடனிருந்-தனர்.