தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மான் வேட்டை: தொழிலாளி கைது

மான் வேட்டை: தொழிலாளி கைது

மான் வேட்டை: தொழிலாளி கைது


ADDED : ஜூலை 27, 2026 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 01:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த சேசுராஜபுரம் அருகே நாட்றாம்பாளையம் புதுார் கிராமத்தை சேர்ந்தவர் குமார், 36. இவர், உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி, அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று, கடமானை வேட்டை-யாடி அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட்டதுடன், மீதமுள்ள இறைச்சியை உப்பு கண்டம் போட்டு பயன்படுத்தி வருவதாக, அஞ்செட்டி வனத்

துறைக்கு தகவல் கிடைத்தது.

அதனால், அஞ்செட்டி வனச்சரகர் அருள்குமார் மற்றும் அஞ்-செட்டி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கந்தவேல் அடங்கிய குழு-வினர், குமார் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் நேற்று முன்தினம் கூட்டாக சோதனை செய்தனர்.இதில், வைக்கோல் போரில் கள்ளத்துப்பாக்கி, அதற்கு பயன்ப-டுத்தும் சைக்கிள் பால்ஸ், கரி மருந்து, யூரியா, தீப்பெட்டி, ஈய-குண்டு மற்றும் கடமானின் இரு கால்கள், அரை கிலோ உப்பு-கண்டம் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us