/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிணற்றுக்குள் விழுந்த மான் மீட்பு
/
கிணற்றுக்குள் விழுந்த மான் மீட்பு
ADDED : ஏப் 23, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:ஓசூர் அருகே, புக்கசாகரம் கிராமத்திற்கு, அருகிலுள்ள வனத்திலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி நேற்று காலை வந்த, 4 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான், அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
ஓசூர் வனத்துறை வனச்சரகர் பார்த்தசாரதி தலைமையிலான வனத்துறையினர் சென்று, கிணற்றுக்குள் நீரில் தத்தளித்த மானை, வலை மற்றும் கயிரை கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர். மானின் உடல் மற்றும் கால் பகுதியில் காயங்கள் இருந்ததால், கோபசந்திரம் வன கால்நடை மையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மானை பேரண்டப்பள்ளி காப்புக்காட்டில் விட இருப்பதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.