/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல் வாக்குறுதி படி ஓய்வூதியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி வழங்க கோரிக்கை
/
தேர்தல் வாக்குறுதி படி ஓய்வூதியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி வழங்க கோரிக்கை
தேர்தல் வாக்குறுதி படி ஓய்வூதியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி வழங்க கோரிக்கை
தேர்தல் வாக்குறுதி படி ஓய்வூதியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி வழங்க கோரிக்கை
ADDED : செப் 30, 2024 01:03 AM
தேர்தல் வாக்குறுதி படி ஓய்வூதியர்களுக்கு
கூடுதல் அகவிலைப்படி வழங்க கோரிக்கை
கிருஷ்ணகிரி, செப். 30-
ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் அகவிலைப்படியை வழங்க, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம், கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சீதாராமன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நாராயணன், தர்மபுரி மாவட்ட தலைவர் வரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் மருதை, மண்டல செயலாளர் ரத்தினவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொருளாளர் காளிங்கராயன் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். தலைமை நிலைய செயலாளர் பக்தவச்சலம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தர்மபுரி மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.
கூட்டத்தில், மாநில தலைவர் சீதாராமன், நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க., அரசு, சட்டசபை தேர்தல் அறிக்கை வாக்குறுதி அளித்தபடி, 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் அகவிலைப்படியை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு நியாயமான ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் நீக்க வேண்டும். பண்டிகை முன்பணம், 4,000 ரூபாய் என்பதை, 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசு மாதந்தோறும் வழங்கும் மருத்துவ படியை, 300 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.