/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கடப்பாரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கோரிக்கை
/
கடப்பாரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கோரிக்கை
ADDED : ஜன 07, 2025 01:05 AM
ஊத்தங்கரை,: ஊத்தங்கரை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை பஞ்., புளியானுார் கிராமம் அருகே அமைந்துள்ள ஜவ்வாது மலை அடிவாரத்தில் கடப்பாரை ஆறு உள்ளது. ஜவ்வாது மலை மேலிருந்து வரும் தண்ணீர், கடப்பாரை ஆற்றின் வழியாக வந்து, சிங்காரப்பேட்டை பஞ்., உள்ள தீர்த்திரிவலசை பெரிய ஏரியில் நிரம்புகிறது. அங்கிருந்து வெளியேறும் உபரி நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக, வீணாக கடலில் கலக்கிறது. கடப்பாரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நீரை சேமிப்பதன் மூலம், 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்,
இந்த ஆற்றின் மூலம், சென்னம்மாள் கோவில் ஏரி, நார்சாம்பட்டி ஏரி, பிள்ளையார் கோயில் ஏரி, நாய்கனுார் ஏரிகள் நிரம்புவதன் மூலம், தண்ணீரை சேமிக்க முடியும். சிங்காரப்பேட்டை, அத்திபாடி, வெள்ளகுட்டை, நாய்க்கனுார், நடுபட்டி, பாவக்கல், மூன்றம்பட்டி ஆகிய பஞ்.,களில், 200க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகும். கடப்பாரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதால், அப்பகுதி மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறும். அப்பகுதி மக்களின், 50 ஆண்டு கால கோரிக்கையான தடுப்பணை கட்டுவது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்திடம், தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தும் பயனில்லை என, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேம்பாலத்தில் சிக்கிய புறாமீட்ட தீயணைப்பு துறை
ஓசூர்: ஓசூர், பஸ் ஸ்டாண்ட் எதிரே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் உள்ளது. இதன் அடிப்
பகுதியில், மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் பிளாஸ்டிக் குழாய்கள் அமைத்து, அவற்றை பாலத்துடன் சேர்த்து, இரும்பு கிளாம்ப் மூலம் பொருத்தி உள்ளனர். நேற்று காலை புறா ஒன்று, பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் அமர்ந்திருந்தது. அதன் கால் பகுதியில் ஏற்கனவே நுால் ஒன்று சிக்கியிருந்ததால், அது பிளாஸ்டிக் குழாயின் கிளாம்ப் பகுதியில் சிக்கியது. அதனால் புறாவால் பறக்க முடியாமல் நீண்ட நேரமாக தொங்கி கொண்டிருந்தது. தகவலின்படி, ஓசூர் தீயணைப்புத்துறையினர், புறாவை மீட்டு பத்திரமாக பறக்க விட்டனர்.

