/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆதார் கார்டு எடுக்க வரும் மக்கள் அவதி கூடுதல் கவுன்டர் திறக்க வலியுறுத்தல்

ADDED : நவ 17, 2025 03:38 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், 4 வருவாய் உள் வட்டத்தில், 43 கிராமங்கள் உள்ளன. இம்மக்கள் ஆதார் பதிவு செய்ய, தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு தினமும், 100க்கும் மேற்பட்டோர் வருகின்-றனர்.
ஆனால், 30 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகி-றது. இதற்கு காலை, 6:00 மணி முதலே மக்கள் வரிசையில், நீண்ட நேரம் அலுவலகத்திற்கு வந்து காத்திருக்கின்றனர். 10:00 மணியளவில் டோக்கன் கொடுக்கப்படும் போது, டோக்கன் கிடைக்காமல், மக்கள் பாதி பேர் திரும்பிச் செல்கின்றனர். இதில், இணையதள பிரச்னையால் சில நேரங்களில், 30 பேருக்கு கூட, ஆதார் எடுக்க முடியாமல் திருப்பி அனுப்புகின்றனர். ஆதார் சேவை மையத்தில், மதிய வேளையில், 1:00 மணிக்கு, மதிய உணவு வேளைக்கு பிறகு, 4:00 மணிக்கு மீண்டும் ஆதார் எடுக்க தொடங்குவதால், நீண்ட நேரம் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், தாலுகா அலுவலகத்தில், ஆதார் எடுக்க கூடுதல் கவுன்டர் திறக்க, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.