/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாக்காளர்களுக்கு வழிகாட்ட அ.தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தல்
/
வாக்காளர்களுக்கு வழிகாட்ட அ.தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தல்
வாக்காளர்களுக்கு வழிகாட்ட அ.தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தல்
வாக்காளர்களுக்கு வழிகாட்ட அ.தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தல்
ADDED : நவ 17, 2025 03:38 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், அ.தி.மு.க., வடக்கு ஒன்றியம் சார்பில், கந்திக்குப்பம் தனியார் மண்டபத்தில், பூத் கமிட்டி நிர்வா-கிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செய-லாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ.,பேசும்போது, ''தற்போது நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளில், அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் முழுமையாக பங்கேற்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாதவர்கள், சிரமத்தை சந்திக்கும் வாக்காளர்களுக்கு, கட்சி நிர்வாகிகள் வழிகாட்ட வேண்டும்,'' என்றார்.
பர்கூர் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், கிருஷ்ணகிரி விநாயகா மகாலில், நகர செயலாளர் கேசவன் தலைமையில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. துணை பொதுச்செய-லாளர் முனுசாமி எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட செயலாளர் அசோக்குமார்
எம்.எல்.ஏ., பேசினர்.

