/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
/
தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : நவ 17, 2025 03:39 AM
கிருஷ்ணகிரி: தோட்டக்கலை பயிர்களை காப்பீடு செய்ய, கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் இந்திரா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசா-யிகளுக்கு, எதிர்பாராத பருவநிலை மாற்றத்தால், தோட்டக்கலை பயிர்களின் விளைச்சலில் இழப்பு ஏற்படுகின்றன. எனவே, விவ-சாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தவிர்க்க, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம், காப்பீடு செய்து பயன்பெறலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, தக்காளி, முட்டைகோஸ், உருளைகிழங்கு, கத்-திரிக்காய் ஆகிய பயிர்களுக்கு, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்-டத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடாக, ஒரு ஏக்கர் வாழைக்கு, 1,845 ரூபாயை வரும், 2026 பிப்., 28க்குள் செலுத்தி, காப்பீட்டு தொகையாக, 36,350 ரூபாயை பெறலாம். கத்திரிக்கு, 1,493 ரூபாய், முட்டைகோசுக்கு, 809 ரூபாய், உருளைக்கிழங்கிற்கு, 1,322 ரூபாய், தக்காளிக்கு, 1,863 ரூபாயை வரும், 2026 ஜன., 31க்குள் செலுத்த வேண்டும். விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள பொதுசேவை மையம் அல்-லது தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் அல்லது வங்கிகள் மூலம், பயிர் காப்பீடு தொகை செலுத்தலாம். மேலும் விபரங்க-ளுக்கு, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல-கத்தை அணுகலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

