/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளி நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டடம் இடித்து அகற்றம்
/
அரசு பள்ளி நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டடம் இடித்து அகற்றம்
அரசு பள்ளி நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டடம் இடித்து அகற்றம்
அரசு பள்ளி நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டடம் இடித்து அகற்றம்
ADDED : மார் 17, 2025 03:45 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுாரில், தேசிய நெடுஞ்சாலை-யோரம், பாகலுார் சார்பதிவாளர் அலுவலகம் அருகே, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில், 500 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து, பாகலுார் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த மொபைல்போன் கடை நடத்தும் மோகன், 35, கடை கட்டியுள்ளார். நிலத்தின் மதிப்பு, 10 லட்சம் ரூபாய் மதிப்பு எனத்தெரிகிறது. இதுகுறித்து ஓசூர் தாசில்தார் சின்னசா-மிக்கு புகார் சென்றது. ஆக்கிரமிப்பை அகற்ற எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும் பணியை தொடர்ந்துள்ளார்.
இதனால் தாசில்தார் சின்னசாமி மற்றும் வருவாய்த்துறையினர், பாகலுார் போலீசார் உதவியுடன், ஆக்கிரமிப்பு கட்டடத்தை நேற்று முன்தினம் இடித்து அகற்றினர். அப்போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த மோகன் மீது, பாகலுார் ஆர்.ஐ., சதீஷ் புகார் படி, பாகலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அ.தி.மு.க., பிரமுகர் ஒருவரது பின்புலத்துடன், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும், அதையும் மீறி, மோகன் கட்டடம் கட்டி-யதாக, போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தெரிவித்தனர்.