/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நீதிமன்ற உத்தரவுப்படி புதிய நுாலகம் இடிப்பு மக்கள் வரிப்பணம் ரூ.21.75 லட்சம் வீண்

ADDED : ஏப் 27, 2025 03:58 AM
பாகலுார்: ஓசூர் அருகே, பாகலுாரிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு எதிரே, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உத்தரவின்படி, 21.75 லட்சம் ரூபாய் மதிப்பில் நுாலகம் கட்டும் பணி துவங்கப்பட்டது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம், தனி நபருக்கு சொந்தமானது எனக்-கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஏற்கனவே வழக்கு நிலு-வையில் இருந்தது. இதை கண்டுகொள்ளாத அதிகாரிகள், பிரச்-னைக்குரிய நிலத்தில், ஒப்பந்ததாரர் மூலம் நுாலகத்தை கட்டும் பணியை கடந்தாண்டு பிப்., மாதம் துவங்கினர். பணியை விரைந்து முடிக்குமாறு, ஒப்பந்ததாரருக்கு, ஓசூர் ஒன்றிய அலுவ-லகம் மூலம் அழுத்தம் தரப்பட்டுள்ளது. இதில், 90 சதவீதத்-திற்கும் மேலான பணிகள் முடிந்த நிலையில், புதிதாக கட்டப்-படும் நுாலகத்தை இடித்து அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்-டது. அதனால் நேற்று முன்தினம் இரவோடு, இரவாக நுாலகம் இடித்து அகற்றப்பட்டது. அதிகா-ரிகள் சரியான இடத்தை தேர்வு செய்யாததால், மக்கள் வரிப்-பணம் வீணாகியுள்ளது. இப்படி அலட்சிய போக்கில் செயல்-பட்ட அதிகாரிகள் மீது, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க, பாகலுார் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதி-காரிகளை கண்டித்து மக்கள் இன்று போராட்டம் நடத்த ஆயத்த-மாகி வருகின்றனர்.