/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'கடை வாடகைக்கு 18 சதவீத வரி விதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் டிச., 11ல் ஆர்ப்பாட்டம்'
/
'கடை வாடகைக்கு 18 சதவீத வரி விதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் டிச., 11ல் ஆர்ப்பாட்டம்'
'கடை வாடகைக்கு 18 சதவீத வரி விதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் டிச., 11ல் ஆர்ப்பாட்டம்'
'கடை வாடகைக்கு 18 சதவீத வரி விதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் டிச., 11ல் ஆர்ப்பாட்டம்'
ADDED : நவ 29, 2024 01:38 AM
'கடை வாடகைக்கு 18 சதவீத வரி விதிப்பை கண்டித்து
தமிழகம் முழுவதும் டிச., 11ல் ஆர்ப்பாட்டம்'
கிருஷ்ணகிரி, நவ. 29-
வாடகைக்கு, 18 சதவீத வரி விதிப்பை கண்டித்து வரும் டிச., 11ல், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
கிருஷ்ணகிரியில், அவர் மேலும் கூறியதாவது:
வணிக வரித்துறை அதிகாரிகள் கடுமையாக வணிகர்களை அச்சுறுத்தி வருகின்றனர். கடைகளுக்கு வாடகை செலுத்தும் போது, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., கட்ட வேண்டும். ஆகவே தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு முதற்கட்டமாக வரும் டிச., 11-ல் தமிழகம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறோம்.
டிச., 5ல் டெல்லியில் அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. அதில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். இது மத்திய அரசின் சட்டம். ஆகவே அனைத்து மாநில நிர்வாகிகளின் ஒப்புதலுடன் டெல்லியை நோக்கி பேரணியாக சென்று, பிரதமர் மற்றும் மத்திய நிதி அமைச்சரிடம் முறையிட உள்ளோம். அதற்கு தீர்வு கிடைக்கவில்லையென்றால் இந்தியா முழுவதும் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தை நடத்துவோம்.
ஆன்லைன் வர்த்தகம் மூலம் உள்நாட்டு வணிகர்களை சுரண்டிக் கொண்டிருக்கின்றனர். பலர் பெரிய மால்களை அமைத்து சட்டத்திற்கு புறம்பாக வணிகம் செய்கின்றனர். தேர்தல் நேரத்தில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், 11 கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். அதில் ஆறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி கொடுத்துள்ளது. அதிகாரிகள் சாதாரண வணிகர்களிடம் ஆய்வு செய்கின்றனர். ஆனால், பெரிய நிறுவனங்களில் ஆய்வு செய்வதில்லை. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. சிறு வியாபாரிகளிடம் கடை கடையாக சென்று அபராதம் விதிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டத் தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் நாராயணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் குமரவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.