/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்னையில் மகசூலை அதிகரிக்க வேளாண் மாணவியர் செயல்விளக்கம்
/
தென்னையில் மகசூலை அதிகரிக்க வேளாண் மாணவியர் செயல்விளக்கம்
தென்னையில் மகசூலை அதிகரிக்க வேளாண் மாணவியர் செயல்விளக்கம்
தென்னையில் மகசூலை அதிகரிக்க வேளாண் மாணவியர் செயல்விளக்கம்
ADDED : மே 03, 2024 07:31 AM
கிருஷ்ணகிரி : சூளகிரி, வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லுாரியின் சார்பில், வேளாண் உதவி இயக்குனர் ஜான்லுார்து சேவியர் தலைமையில், 11 பேர் கொண்ட இளமறிவியல், 4ம் ஆண்டு மாணவியர், ஊரக வேளாண் மற்றும் பயிற்சி திட்டத்தில், சூளகிரி வட்டாரத்திலுள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று, விவசாயிகளிடம் கலந்துரையாடவும், அவர்கள் பின்பற்றும் பாரம்பரிய தொழில்நுட்ப விவசாய செயல்முறை மற்றும் பயிர் திட்டங்களை அவர்களுக்கு விளக்கவும், உதவி இயக்குனர் மாணவியருக்கு எடுத்துரைத்தார். கல்லுாரியில் கற்றறிந்த நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன விவசாய இயந்திரங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
அதன்படி, சூளகிரி வட்டாரம் ஏனுசோனை கிராமத்தில், வேளாண் கல்லுாரி மாணவியர், விவசாயி ரவி என்பவரது தோட்டத்தில், தென்னை மரத்தில் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். அப்போது, விவசாயிகள் முன்னிலையில், தென்னை மரத்தில் பூ பூப்பதற்காகவும், மகசூலை அதிகரிக்கவும், வேர் ஊட்டத்தை மேற்கொண்டனர். தென்னை டானிக், தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்ததாகும். வேர் ஊட்டம் மூலம், தென்னையில் வளர்ச்சியும், அதன் மகசூலும் அதிகரிப்பதால், விவசாயிகள் கூடுதல் பயனடையலாம் என, விளக்கம் அளித்தனர்.