/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டாக்டர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
டாக்டர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
டாக்டர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
டாக்டர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 15, 2024 02:24 AM
கிருஷ்ணகிரி, நவ. 15-
டாக்டர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், புதிதாக சட்டம் இயற்றக்கோரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன்பு, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் கோகுல், துணைத்தலைவர் மஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் முத்துசாமி தலைமை வகித்து பேசியதாவது:
சென்னை, கிண்டியிலுள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர், கத்தியால் குத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம். டாக்டர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம், அபராதம் மற்றும் தண்டனை உண்டு என, பல மாநில அரசுகள் சட்ட விதிகளை உருவாக்கி இருந்தாலும், வன்முறையில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட்டதாக தகவல் இல்லை. அதுதான் டாக்டர்களுக்கு எதிராக வன்முறை தொடர்கிறது. எனவே, இந்தியா முழுவதும் டாக்டர்களுக்கு ஒரே மாதிரியான பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் நிலையான, உறுதியான பாதுகாப்பு வழங்க வேண்டும். மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவ பணியாளர்களை தாக்குபவர்களை விரைவாகவும், கடுமையாகவும் தண்டிக்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும். அதுவரை மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்களை கொண்டு, டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பாலசந்தர், துணைத்தலைவர்கள் கேசவன், பிரகாஷ், இந்திய மருத்துவ கவுன்சில் தனசேகரன், ஏ.ஓ., அசோசியேஷன் மாநில பொருளாளர் சரவணன் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.