/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பல்கலை மாணவிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்
/
பல்கலை மாணவிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 27, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், டிச. 27-
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி வேண்டி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவரணியான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் ஓசூர் காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாவட்ட அமைப்பாளர் புவன் தலைமை வகித்தார். அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை செயலாளர் விஷ்ணுகுமார், சேலம் கோட்ட பொறுப்பாளர் தேவராஜ் பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் கிரண் குமார் ஆகியோர் பேசினர். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினர் ராகேஷ் சாய்குமார், வக்கீல் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
வட மாநில வாலிபரை