/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
கிருஷ்ணகிரியில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 09, 2024 11:33 AM
கிருஷ்ணகிரி: மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசையும், கவர்னர்களையும் கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., - தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் பேசினர். தி.மு.க., நகர செயலாளர் நவாப், நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் தட்ரள்ளி நாகராஜ், தி.மு.க., பிரமுகர்கள் சீனிவாசன், அன்பரசன், சி.பி.எம்., மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சி.பி.எம்., மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டில்லிபாபு பேசினார்.

