/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மல்பெரியில் வேர் அழுகல் நோய் பட்டுப்புழு மாணவியர் செயல்விளக்கம்
/
மல்பெரியில் வேர் அழுகல் நோய் பட்டுப்புழு மாணவியர் செயல்விளக்கம்
மல்பெரியில் வேர் அழுகல் நோய் பட்டுப்புழு மாணவியர் செயல்விளக்கம்
மல்பெரியில் வேர் அழுகல் நோய் பட்டுப்புழு மாணவியர் செயல்விளக்கம்
ADDED : மே 27, 2024 05:53 AM
கிருஷ்ணகிரி : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்ந்த, மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பட்டுப்புழுவியல் துறையில், 4ம் ஆண்டு படிக்கும் மாணவியர், ஜேன் ஜெனிஷா, மங்கையகரசி, சாபியா சுல்தானா, சிவரஞ்சனி, சன்மதி, உச்சிமகாளி ஆகியோர், ஊரக வேளாண் பயிற்சி அனுபவத்திற்காக, கிருஷ்ணகிரியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி அருகே, கங்கசந்திரம் கிராமத்தில் மல்பெரி வேர் அழுகல் நோய் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். மல்பெரிவேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் புதிய உயிரியல் தொழில்நுட்பம் (ட்ரைகோடர்மா) குறித்தும், அதை தனிமைப்படுத்தும் முறையையும், பட்டு விவசாயிகளிடம், மாணவியர் விளக்கம் அளித்தனர்.