/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்
/
ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்
ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்
ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 10, 2025 01:01 AM
ஓசூர், ஓசூர் தொகுதி, காங்., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளருமான மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக, காங்., தலைவரும், சட்டசபை பொதுக்கணக்கு மதிப்பீட்டு குழு தலைவருமான செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., கடந்த திங்கட்
கிழமை, தன் தொகுதியிலுள்ள வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றார். அக்கோவிலின், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் உள்நோக்கத்துடன் அவரை அலட்சியப்படுத்தி, அவமரியாதை செய்துள்ளனர். எம்.எல்.ஏ., என்ற முறையில் விளக்கம் கேட்டபோது, அதிகாரிகள் முறையான விளக்கமளிக்காமல், அலட்சியமாக நடந்துள்ளனர். சமூக நீதி காக்கும் ஆட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலினின் கூட்டணி கட்சி தலைவருக்கே, இந்த இழிவான சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே, அறநிலையத்துறையை கண்டித்து நாளை காலை, ஓசூர் தேர்ப்பேட்டையிலுள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.