ADDED : செப் 23, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: புரட்டாசி மாதம் கடந்த, 17ல் பிறந்தது. பெருமாளுக்கு உகந்த இந்த மாதத்தில், பக்தர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து, பெரு-மாளுக்கு விரதம் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருமாளை வழிபடுபவர்கள் அதிகம் உள்ளதால், புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்பது வழக்கம். புரட்-டாசி மாதம் பிறந்து, முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய நாளில், கிருஷ்ணகிரியில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்-டது. இதற்கு மாறாக, காய் கறிகளை வாங்குவதற்காக, உழவர் சந்-தையில் அதிக மக்கள் குவிந்தனர்.