தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பேக்கரியில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிப்பு

பேக்கரியில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிப்பு

பேக்கரியில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிப்பு


UPDATED : அக் 27, 2026 07:12 PM

ADDED : அக் 27, 2026 06:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 07:12 PM ADDED : அக் 27, 2026 06:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகலுார்: ஓசூர் அருகே, தனியார் பேக்கரியில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறையினர், காலாவதியான, கெட்டுப்போன, உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுாரிலுள்ள பேரிகை சாலையில், 'மயூரா' என்ற பெயரில் பேக்கரி இயங்குகிறது. இங்கு கெட்டுபோன கேக் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக, உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் சென்றன. அதன்படி, ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி தலைமையிலான அலுவலர்கள், அந்த பேக்கரியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. இதனால், 15 கிலோ அளவில் கெட்டுப்போன, காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை வெளியே கொட்டி அழித்தனர். மேலும், அந்த பேக்கரி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, வரும் காலங்களில் இதேபோல் நடந்தால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பேக்கரி பராமரிப்பின்றி அசுத்தமாக இருந்தால், அதை தொடர்ந்து, 3 நாட்களுக்கு மூடவும், சுத்தம் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் ஆய்வு செய்து, சுத்தமாக இருப்பது உறுதி செய்யப்பட்ட பின், பொருட்களை விற்பனை செய்ய அனுமதி தரப்படும் எனக்கூறிய உணவு பாதுகாப்புத்துறையினர், பேக்கரியை மூடி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us