/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'வளர்ச்சி திட்டப்பணிகளைநவ.,க்குள் முடிக்க வேண்டும்'
/
'வளர்ச்சி திட்டப்பணிகளைநவ.,க்குள் முடிக்க வேண்டும்'
'வளர்ச்சி திட்டப்பணிகளைநவ.,க்குள் முடிக்க வேண்டும்'
'வளர்ச்சி திட்டப்பணிகளைநவ.,க்குள் முடிக்க வேண்டும்'
ADDED : மே 04, 2025 01:14 AM
கிருஷ்ணகிரி:தமிழக அரசின் திட்டங்கள், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார்.
கலெக்டர் தினேஷ் குமார், எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன் (பர்கூர்), பிரகாஷ் (ஓசூர்), ராமச்சந்திரன் (தளி) முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், 'தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்த அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் வரும், நவ., மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்,' என்றார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா, வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.