/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தைப்பூச தேர்த்திருவிழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
/
தைப்பூச தேர்த்திருவிழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
தைப்பூச தேர்த்திருவிழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
தைப்பூச தேர்த்திருவிழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
ADDED : பிப் 11, 2025 07:04 AM
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர்
திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நடந்-தது.
தர்மபுரி, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா
கடந்த, 6ல், கொடியேற்றத்துடன் துவங்-கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை வழி-பாடு, பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது.நேற்று காலை தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலி-ருந்து, பக்தர்கள் பால் குடம் எடுத்து
ஊர்வலமாக வந்தனர். ஏராள-மான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன்
செலுத்தினர். நேற்றிரவு சுவாமி திருக்கல்யாண உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் திருவீதி
உலாவும் நடந்தது. இன்று மாலை, 6:00 மணிக்கு விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும்
நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான நாளை காலை, பெண்கள் மட்டும் வடம் பிடித்து தேர் இழுக்கும்
நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 14ல் கோவில் விழா கொடியிறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும்,
15ல், சயன உற்சவமும் நடக்கி-றது. விழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை
அறங்-காவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.