/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
/
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 02, 2024 10:38 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக, நள்ளிரவில் பட்டாசு வெடித்து, ஒருவருக்கொருவர் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில், சூளகிரி வரதராஜ பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சூளகிரி அடுத்த பண்டப்பள்ளியில், தென்பெண்ணை ஆற்றின் கரையிலுள்ள பைரேஷ்வரர் கோவிலில், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். கோபசந்திரம் தட்சிண திருப்பதி, ஓசூர் மலை மீதுள்ள பெருமாள் கோவில், தேர்ப்பேட்டை பத்ர காசி விஸ்வநாதர் கோவில், கோகுல் நகர் சாய்பாபா கோவில், ராஜகணபதி நகர் வரசித்தி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கெலமங்கலம் ஜீவா நகர் வெக்காளியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
* கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்து, 2 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது. ஜோதிவிநாயகர் கோவில் தெருவிலுள்ள முத்து மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கவச அலங்காரத்திலும், பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்திலும், நேதாஜி சாலை சமயபுரத்து மாரியம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல், புதுப்பேட்டை பழைய சப் - ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு, 666 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் தங்கக்கவச அலங்காரமும் நடந்தன. மேலும், காந்தி சாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வினை தீர்த்த விநாயகர் கோவில், காந்தி நகர் வலம்புரி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்திலும், டான்சி வளாகத்திலுள்ள செல்வ விநாயகர் கோவிலில், வெள்ளிக்கவச அலங்காரத்திலும் சுவாமி அருள் பாலித்தனர்.

