/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எல்லம்மாதேவி கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல்
/
எல்லம்மாதேவி கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல்
எல்லம்மாதேவி கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல்
எல்லம்மாதேவி கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல்
ADDED : ஆக 05, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ராமாபுரம் கிராமத்தில், பக்தர்கள் சார்பில் புதிதாக எல்லம்மா கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
அம்மனுக்கு விரதம் இருந்த பக்தர்கள், மேள, தாளங்கள் முழங்க பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக, தென்பெண்ணை ஆற்றில் பூஜை செய்து, எல்லம்மாதேவி கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.