/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊர் திருவிழாவில் வன சுவாமிக்கு தலவிளக்கு எடுத்த பக்தர்கள்
/
ஊர் திருவிழாவில் வன சுவாமிக்கு தலவிளக்கு எடுத்த பக்தர்கள்
ஊர் திருவிழாவில் வன சுவாமிக்கு தலவிளக்கு எடுத்த பக்தர்கள்
ஊர் திருவிழாவில் வன சுவாமிக்கு தலவிளக்கு எடுத்த பக்தர்கள்
ADDED : பிப் 01, 2024 10:48 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், சார்பர்த்தி, புங்கம்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகர், சூத்திர கரக சாமுடியப்பன், சாமுண்டியம்மன், செல்லியம்மன், மாரியம்மன், பெருமாளப்பன், வீரபத்திர சுவாமி கோவிலில் ஊர்த்திருவிழா கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு, பொன்னேர் கட்டுதல், மண்டு சாட்டல் நிகழ்ச்சியும், 25ல் ஊர் சாட்டல், 29 காலை சாமுடியப்பன், சாமுண்டியம்மன், செல்லியம்மன் கரகம், செட்டிமாரம்பட்டி, முதலிப்பட்டி வீரபத்திரசுவாமி குரும்பர் பலகைக்கு கங்கை பூஜை ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் காலை, விநாயகர், மாரியம்மன், பெருமாளப்பன் சுவாமிகளுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். நேற்று காலை, சாமுடியப்பன், சாமுண்டியம்மன், செல்லியம்மன், வன சுவாமிக்கு தலவிளக்கு எடுத்தல், கரகம் தலை கூடுதல் ஆகியவை நடந்தன. இதையொட்டி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
இன்று காலை, புங்கம்பட்டி கிராமத்தில் மாடு ஓட்டுதல், மதியம், சாப்பர்த்தி கிராமத்தில் மாடு ஓட்டுதல், இரவு, சாப்பர்த்தி, புங்கம்பட்டி கிராமங்களில், கரகம், குருமர் பலகை ஆட்டம் ஆகியவை நடக்க உள்ளன. நாளை, கூளி ஆட்டம், இரவு நையாண்டி மேளம், வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.