ADDED : டிச 20, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாக்கடை கால்வாய்கள் துார்வாரல்
கிருஷ்ணகிரி, டிச. 20-
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நின்றது. இதனால் கொசுக்கள் அதிகரித்தும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று டவுன் பஞ்.,க்கு உட்பட்ட, 5வது வார்டு அம்பேத்கர் காலனியில் சாக்கடை கால்வாய்கள் துார்வாரும் பணி நடந்தது. டவுன் பஞ்., துணைத்தலைவர் மாலினி மாதையன், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.