/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
117 டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டலில் மது விற்பனை
/
117 டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டலில் மது விற்பனை
ADDED : அக் 01, 2024 01:22 AM
117 டாஸ்மாக் கடைகளில்
டிஜிட்டலில் மது விற்பனை
கிருஷ்ணகிரி, அக். 1-
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், 117 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள்தோறும், ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அத்துடன் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை போன்ற நாட்களிலும், 2 கோடி முதல், 2.50 கோடி ரூபாய் வரையில் மது விற்பனை நடக்கிறது.
மாநிலம் முழுவதும் டிஜிட்டல் முறையில் மது விற்பனையை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக கோவை வடக்கு, வடசென்னையில், 266 மதுக்கடைகளில் நவ., முதல் இந்த டிஜிட்டல் முறை கொண்டு வரப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம், 117 மதுக்கடைகள் உள்ளன. பெரிய மாநகரங்கள் அடங்கிய பகுதிகளுக்கு அடுத்தபடியாக நம் மாவட்டத்தில் டிஜிட்டல் முறையில், மது விற்பனை தொடங்க வாய்ப்பு உள்ளது. அனேகமாக டிச., அல்லது ஜன., மாதம் முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடங்கப்படலாம். இதற்காக மொபைலில், 'கியூஆர்' கோட்டை ஸ்கேன் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம், டாஸ்மாக் கடைகளில், பல்வேறு இடங்களில் நிலவி வரும் சில்லரை பிரச்னைகள் உள்ளிட்டவைகளுக்கு தீர்வு கிடைக்கும்' என்றனர்.