/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊர் காவல் படைக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
ஊர் காவல் படைக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஆக 07, 2011 01:41 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊர்காவல் படையில் காலியாக உள்ள 84 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவர்கள் அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனில் வரும் 12ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
எஸ்.பி.,கண்ணன் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஊர்காவல் படையில் காலியாக உள்ள 55 ஆண்கள், 29 பெண்கள் சேர்த்து மொத்தம் 84 பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். இதற்காக விண்ணப்பிப்போர் ஆண்கள் 168 செ.மீ., உயரம், மார்பளவு 82 செ.மீ., விரியும்போது 85 செ.மீட்டர் இருக்க வேண்டும். பெண்கள் 165 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் வாங்கி பூர்த்தி செய்து வரும் 12ம் தேதிக்குள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் சமர்பிக்க வேண்டும். மனுக்கள் பரிசீலனை அடிப்படையில் தகுதி தேர்வுக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும். தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழக முதல்வர் ஊர்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் சம்பளமாக வழங்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணபித்து ஊர்காவல் படையில் சேரலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.