தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 26, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்-கோரி நேற்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் வெங்க-டேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெரியசாமி பேசியதாவது:

தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வரு-வாய்த்துறை மூலம், 1,500 ரூபாயும், மாற்றுத்திற-னாளிகள் துறை மூலம், 2,000 ரூபாயும் மாத உத-வித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், ஆந்திர மாநிலத்தில், 6,000 ரூபாய், 10,000 ரூபாய், 15,000 ரூபாய் என மூன்று வகையாகவும், புதுச்சேரியில், 3,500 ரூபாய், 4,500 ரூபாய், 5,500 ரூபாய் என மூன்று வகையாகவும், தெலுங்கானாவில், 4,016 ரூபாயும் வழங்குகின்றனர். ஆனால் தமிழகத்தில், வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை இன்-றைய வாழ்வாதார சூழலில் போதுமானதாக இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த, 4 ஆண்டுகளாக உதவித்தொகை எதுவும் உயர்த்த-வில்லை. உதவித்தொகையை உயர்த்தக்கோரி, கடந்த, 3 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் போராடி வருகின்றனர். எனவே புதிதாக பொறுப்-பேற்றுள்ள விஜய் அரசு, மாற்றுத்திறனாளிகளுக்-கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க, நட-வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

இதே போல், போச்சம்பள்ளி தாலுகா அலுவ-லகம் முன்பு, மாவட்ட துணை தலைவர் கோட்-டீஸ்வரன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us