/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 16, 2025 01:06 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பல கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். செயலாளர் பெரியசாமி, பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் பேசினர். துணைத்தலைவர்கள் கோட்டீஸ்வரன், வெங்கடேசன், துணைச்செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
100 சதவீதம் பார்வை திறனற்றோரை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் இணைக்க வேண்டும். மொத்த அரசு பணியிடங்களில், ஒரு சதவீதம் பார்வையற்றோர் இருக்கும் வகையில், வங்கி பணி, கல்விப்பணி போன்றவற்றில் கூடுதலாக பார்வையற்றோருக்கு ஒதுக்குவதை உறுதி படுத்த வேண்டும், என்பன
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.