/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அவதானப்பட்டி ஏரி படகு இல்லத்தில் பேரிடர் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சி

ADDED : செப் 04, 2025 01:15 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் சார்பில்,
அவதானப்பட்டி ஏரி படகு இல்லத்தில், பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து
ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இதில், நீர்நிலைகளில் தவறி விழுந்தவர்களை மீட்டு, முதலுதவி செய்து மருத்துவ மனைக்கு அனுப்புவது, மழைக்காலங்களில் வீடுகளை
சூழ்ந்துள்ள வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை காப்பது குறித்து தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்ட பின் கூறியதாவது:
மாவட்டத்தில் பேரிடர் கால முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது ஏற்படும் மின்வெட்டு, சாலைகளில் விழுந்த மரங்களை பொக்லைன் மூலம் அகற்றுதல் போன்ற பணிகள் நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய் பேரிடர் மீட்பு குழு மூலம் துரிதமாக மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள், பருவமழை முடியும் வரை ஆறு, ஏரி, குளங்களுக்கு செல்வது, கால்நடைகளுடன் நீர்நிலைகளை கடந்து செல்வது ஆகிய வற்றை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, தீயணைப்பு நிலைய அலுவலர் அந்தோணி சாமி, தாசில்தார் சின்னசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.