/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில் கலந்துரையாடல்
/
ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில் கலந்துரையாடல்
ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில் கலந்துரையாடல்
ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில் கலந்துரையாடல்
ADDED : நவ 23, 2025 01:15 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில், 'திறமையான உற்பத்தித்துறை சூழலை உருவாக்குதல்' குறித்த சிறப்பு கலந்துரையாடல் கூட்டம், 'கான்பெடரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி' மற்றும் 'அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி' சார்பில் நடந்தது. மாணவர்கள் தயாரித்த நவீன தொழில்நுட்ப திட்டங்களின் காட்சிப்படுத்தலுடன் நிகழ்ச்சி துவங்கியது.
அதியமான் கல்வி குழும அறங்காவலர் லாசியா தம்பிதுரை தலைமை வகித்து, திறமை குழுக்களை உருவாக்குதல் மற்றும் ஓசூரின் தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் கல்வி நிறுவனங்களின் பங்கு என்ற தலைப்பில் பேசினார்.
சி.ஐ.ஐ., மாவட்ட கவுன்சில் தலைவர் மனோகர், 'உற்பத்தியை மறு கற்பனை செய்தல் -மற்றும் நாட்டின் அடுத்த வளர்ச்சி அலைக்கான திறன்கள், தலைமைத்துவம் உருவாக்குதல்' என்ற தலைப்பிலும், தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் உன்னிகிருஷ்ணன், '2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது யார்' என்ற தலைப்பிலும் பேசினர்.
அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன், தொழில் தொடர்பு துறை டீன் தன
சேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

