/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிராக்டருடன் கிணற்றில் விழுந்தவர் மீட்பு
/
டிராக்டருடன் கிணற்றில் விழுந்தவர் மீட்பு
ADDED : நவ 23, 2025 12:55 AM
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, கீழ்
மைலம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன், 32. இவர் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, தன் விவசாய நிலத்தில் உழவு பணி செய்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் பின்நோக்கி சென்று, அருகிலுள்ள கோவிந்தராஜ் என்பவரின், 100 அடி ஆழ தண்ணீர் நிரம்பிய விவசாய கிணற்றில் விழுந்தது. டிராக்டருடன் விழுந்த வெங்கடேசன், கிணற்றில் தண்ணீர் இருந்ததால் சுதாரித்து தப்பித்து மேலே வந்து கூச்சலிட்டார்.
அப்போது அக்கிராம மக்கள் கூடி, மூன்று கனரக மின்மோட்டார் மூலம், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி, கிணற்றிலிருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றினர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம், கிணற்றிலிருந்த டிராக்டரை மீட்டனர். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

