/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்சாரம் தாக்கி பைக்கில் வந்த பெண் காயம்
/
மின்சாரம் தாக்கி பைக்கில் வந்த பெண் காயம்
ADDED : நவ 23, 2025 12:55 AM
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அருகே மடத்தானுார் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார், 50, லாரி டிரைவர். இவர், அதே பகுதியிலிருந்து மரக்கட்டைகளை, லாரியில் அதிகளவு உயரமாக ஏற்றிக்கொண்டு, தர்மபுரி-திருப்பத்துார் சாலையில், போச்சம்பள்ளி, வடமலம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையின் குறுக்கே சென்ற மின் ஒயரில் மரக்கட்டை சிக்கி, மின் ஒயர் அறுந்து விழுந்தது. அப்போது லாரியின் பின்னால் தர்மபுரி, குமாரசாமிபேட்டையை சேர்ந்த அன்பரசு, 28, அவர் மனைவி விஜி, 25, இருவரும் ஸ்பிளிண்டர் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அறுந்து விழுந்த மின் ஒயர் அவர்கள் மீது விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து விஜி பலத்த காயமடைந்தார். அவர் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில், தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அளவுக்கு அதிகமாக கட்டைகளை ஏற்றி வந்த லாரியை, போச்சம்பள்ளி போலீசார் பறிமுதல் செய்ததுடன், டிரைவர் நந்தகுமார் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

