ADDED : ஆக 26, 2026 05:47 AM

அ நிறம் | அளவு
ஓசூர்; ஓசூர் அலசநத்தம் சாலையிலுள்ள பிஸ்மில்லா நகரை தாண்டி, மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்-பட்ட வாகை ஹோம்ஸ் குடியிருப்பு அருகே, சாலையோரம் குப்பை மலை போல் குவிந்திருந்-தது.
மாநகராட்சி மற்றும் கெலவரப்பள்ளி பஞ்., நிர்வாகத்தின் எல்லை பகுதி என்பதால், குப்-பையை யார் அகற்றுவது என்ற குழப்பத்தில், இரு நிர்வாகமும் அலட்சியமாக இருந்தன. இது தொடர்பாக செய்தி, 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று வெளியானது.இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு, பொக்லைன் மூலமாக ஆண்டுக்-கணக்கில் குவிந்திருந்த குப்பையை அள்ளி, டிராக்டர் மூலமாக அங்கிருந்து அகற்றினர். மேலும், குப்பை இருந்த இடத்தில் பிளீச்சிங் பவுடர் போட்டு, குப்பை தொட்டி ஒன்றை வைத்து சென்றுள்ளனர். இதனால், அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
