ADDED : ஆக 26, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; காலிப்பணியிடங்களை உடனே நிரப்பக்கோரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகி புனிதவள்ளி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, மாநில செயலாளர் முருகம்மாள், ஒன்றிய நிர்வாகி பாக்கியலட்சுமி, ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர், ஒன்றிய தலைவர் சிக்-கமரி, மாவட்ட செயலாளர் வெண்ணிலா ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் சத்து-ணவு மையங்களில் ஏற்பட்டுள்ள பல்லாயிரக்க-ணக்கான காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப, சட்டமன்ற கூட்டத்தொடரில் மான்ய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
