/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நிலம் விற்ற கமிஷன் பெறுவதில் தகராறு; ரூ.22.50 லட்சத்தை போலீசார் பறிமுதல்
/
நிலம் விற்ற கமிஷன் பெறுவதில் தகராறு; ரூ.22.50 லட்சத்தை போலீசார் பறிமுதல்
நிலம் விற்ற கமிஷன் பெறுவதில் தகராறு; ரூ.22.50 லட்சத்தை போலீசார் பறிமுதல்
நிலம் விற்ற கமிஷன் பெறுவதில் தகராறு; ரூ.22.50 லட்சத்தை போலீசார் பறிமுதல்
ADDED : ஜன 10, 2025 07:18 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கருக்கன்சாவடியை சேர்ந்தவர் சிலம்பரசன், 34. பாலக்கோடு சாலையில் ஜிம் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று காலை கருக்கன்சாவடியில் அவரது வீட்டருகே அவருக்கும், அதேபகுதியை சேர்ந்த ஹரி மற்றும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிலம்பரசனிடம், 22.50 லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால் அதற்கான கணக்கு அவரிடம் இல்லை என்பதால் அப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, சிலம்பரசனிடம் விசாரித்தனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியை சேர்ந்தவர் செந்தில். இவர் திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி அருகே உள்ள தன் நிலத்தை, 1.90 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். அதில் கிடைத்த பணத்தில், 22.50 லட்சம் ரூபாயை கமிஷனாக சிலம்பரசனிடம் கொடுத்த செந்தில், சிலருக்கு பிரித்து கொடுக்க சொல்லியுள்ளார். அதை பெற நேற்று காலை சிலம்பரசனை தேடி, அவர்கள் வந்துள்ளனர். அப்போது சிலம்பரசனின் நண்பரான கருக்கன்சாவடியை சேர்ந்த ஹரி, குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு கூட்டம் கூடியதால், பணம் வாங்க வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.விசாரணையில், நிலம் விற்ற பணத்தில் வந்த கமிஷன்தான், 22.50 லட்சம் ரூபாய் என ஆதாரங்கள் பெறப்பட்ட நிலையில், அத்தொகை வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்களிடம் கணக்கு காண்பித்த பின், சிலம்பரசன் தரப்பினர் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

