/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விநாயகர் சிலைகள் 15ல் கரைப்பு; ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆய்வு
/
விநாயகர் சிலைகள் 15ல் கரைப்பு; ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆய்வு
விநாயகர் சிலைகள் 15ல் கரைப்பு; ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆய்வு
விநாயகர் சிலைகள் 15ல் கரைப்பு; ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆய்வு
ADDED : செப் 09, 2024 07:06 AM
ஓசூர்: ஓசூரில் விநாயகர் சதுர்த்தியில், 500க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வரும், 15ல் ஹிந்து அமைப்பினர் பிரதிஷ்டை செய்த, 100க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று, ராமநாயக்கன் ஏரி, தர்கா சந்திராம்பிகை ஏரியில் கரைக்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு வர உள்ளனர்.
இந்நிலையில், ராமநாயக்கன் ஏரி, தர்கா சந்திராம்பிகை ஏரியில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், சேலம் டி.ஐ.ஜி., உமா, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர். விநாயகர் சிலைகள் ஊர்வலமாக செல்லும், காந்தி சிலை, நேதாஜி ரோடு, ஏரித்தெரு, தாலுகா அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அசம்பாவிதமின்றி, சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க, போலீசாருக்கு உத்தரவிட்டனர். ஏ.டி.எஸ்.பி., சங்கர், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் உடனிருந்தார்.