/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்ட தடகள போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசு
/
மாவட்ட தடகள போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசு
ADDED : டிச 10, 2025 10:41 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் மற்றும் ஓசூர் லெஜன்ட் ரோட்டரி சார்பில், ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள போட்-டிகள் நடந்தன.
இதில், 30 வயது முதல், வயது உச்ச வரம்பின்றி வீரர், வீராங்கனைகள் பங்கேற்-றனர். ஓட்டப்பந்தம், நடைப்போட்டி, நீளம் தாண்-டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்-டுதல், குண்டு எறிதல், ஈட்டி, வட்டு எறிதல் போன்ற போட்டிகள் தனித்தனியாக நடந்தன.ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் வழங்கப்-பட்டன. மேலும், சிவகங்கை மாவட்டம், காரைக்-குடி அழகப்பா பல்கலை வளாகத்தில் வரும், 20, 21ம் தேதிகளில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
'ஏசியன் மாஸ்டர் சாம்பியன் ஷிப்' போட்டியில் ஒரு வெள்ளி, இரு வெண்கலப்பத்தக்கம் வென்ற வீராங்கனை சஹானா, ஆஸ்திரேலியாவில் நடந்த, 'உலக உயிர்காக்கும் சாம்பியன் ஷிப்' போட்டியில் பங்கேற்ற கருப்பையா ஜெபாஸ்-டியன் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்-பட்டன.

