sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நேஷனல் அப்ரண்டிஸ்சிப் சேர்க்கை முகாம்மாவட்ட கலெக்டர் அழைப்பு

/

நேஷனல் அப்ரண்டிஸ்சிப் சேர்க்கை முகாம்மாவட்ட கலெக்டர் அழைப்பு

நேஷனல் அப்ரண்டிஸ்சிப் சேர்க்கை முகாம்மாவட்ட கலெக்டர் அழைப்பு

நேஷனல் அப்ரண்டிஸ்சிப் சேர்க்கை முகாம்மாவட்ட கலெக்டர் அழைப்பு


ADDED : மே 07, 2025 01:37 AM

Google News

ADDED : மே 07, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:ஓசூரில் நேஷனல் அப்ரண்டிஸ்சிப் சேர்க்கை முகாம் நடக்க இருப்பதாக, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பயிற்சி பிரிவு மற்றும் திறன் மேம்பாட்டு மற்றம் தொழில் முனைவு அமைச்சகம் சார்பில், மாவட்ட அளவிலான பிரதான் மந்திரி நேஷனல் அப்ரண்டிஸ்சிப் சேர்க்கை முகாம், ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,யில் வரும், 13 ம் தேதி காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கிறது. இதில், மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தொழிற்பழகுனர் பயிற்சிக்கு, ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி போன்ற கல்வி தகுதியுடையவர்களை தேர்வு செய்ய உள்ளன. ஓராண்டு தொழிற்பழகுனர் பயிற்சி முடிப்பவர்களுக்கு, தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இச்சான்றிதழ் பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகை வழங்கப்படும்.

தொழிற்பழகுனர் பயிற்சிக்கு மாத உதவித்தொகையாக, 8,500 ரூபாய் முதல், 18,000 ரூபாய் வரை நிறுவனங்களால் வழங்கப்படும். எனவே தகுதியுடையவர்கள் வரும், 13 ம் தேதி நடக்கும் சேர்க்கை முகாமில், தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை சாலையில் செயல்படும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை நேரிலோ அல்லது 70220 45795, 97879 70227, 95977 11604 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us