ADDED : ஜன 06, 2025 02:13 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, மாவட்ட அள-விலான மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.
இதில், 17 முதல், 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு, 8 கி.மீ., துாரமும், பெண்களுக்கு, 5 கி.மீ., துாரமும், 25 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு, 10 கி.மீ., துாரமும், பெண்களுக்கு, 5 கி.மீ., துாரம் என மாரத்தான் போட்டி நடந்தது. போட்டிகளை பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் துவக்கி வைத்தார். போட்டிகள் விளையாட்டு அரங்கில் தொடங்கி, தானம்பட்டி வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிந்-தது. இதில், 17 முதல், 25 வயதில், 176 ஆண்களும், 85 பெண்-களும், 25 வயதிற்கு மேல், 110 ஆண்களும், 46 பெண்களும் என மொத்தம், 417 பேர் பங்கேற்றனர்.இதில், 25 வயது ஆண்களில் ராமசந்திரன் முதலிடமும், கவின் தனபால், 2ம் இடமும், நியாமத், 3ம் இடமும், பெண்களில், சரிதா முதலிடமும், சரண்யா, 2ம் இடமும், காவியாஞ்சலி, 3ம் இடமும் பெற்றனர். 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில், பார்த்-தீபன் முதலிடமும், கவ்வரதன், 2ம் இடமும், செல்வகுமார், 3ம் இடமும், பெண்களில் கோபிகா முதலிடமும், இந்துமதி, 2ம் இடமும், ரேவதி, 3ம் இடமும் பெற்றனர். முதல் பரிசு, 5,000 ரூபாய், 2ம் பரிசு, 3,000 ரூபாய், 3ம் பரிசு, 2,000 ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.