/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்ட வாலிபால்: ஓசூர் பெண்கள் அணி முதலிடம்
/
மாவட்ட வாலிபால்: ஓசூர் பெண்கள் அணி முதலிடம்
ADDED : ஆக 28, 2025 01:20 AM
ஓசூர் :கிருஷ்ணகிரியில் நடந்து வரும் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், ஓசூர் பெண்கள் அணி முதலிடம் பெற்றது.
யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கின. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். பெண்களுக்கு தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட், வாலிபால், ஹேண்ட்பால், நீச்சல், ஹாக்கி, மேசைப்பந்து, கபடி போன்ற பல்வேறு போட்டிகள் நடக்கிறது. மாணவ, மாணவியர் மற்றும் பொதுப்பிரிவினர் என மொத்தம், 1,884 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் நடந்த பெண்கள் பொது பிரிவினருக்கான வாலிபால் இறுதி போட்டியில், 'ஓசூர் தங்கவேலு அய்யா வாலிபால் அகாடமி' பெண்கள் அணியும், 'அன்னை ஏஞ்சலா' பெண்கள் அணியும் மோதின. அதில், 23 - 25, 25 - 17, 15 - 9 என்ற செட் கணக்கில், 'ஓசூர் தங்கவேலு அய்யா வாலிபால் அகாடமி' பெண்கள் அணி வெற்றி பெற்றது. 'அன்னை ஏஞ்சலா' அணி, 2ம் இடம் பெற்றது. முதல் இரு இடங்களை பெற்ற அணிகளை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் பாராட்டி வாழ்த்தினார்.