/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை கி.கிரி கோ - ஆப்டெக்ஸில் துவக்கம்
/
தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை கி.கிரி கோ - ஆப்டெக்ஸில் துவக்கம்
தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை கி.கிரி கோ - ஆப்டெக்ஸில் துவக்கம்
தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை கி.கிரி கோ - ஆப்டெக்ஸில் துவக்கம்
ADDED : செப் 24, 2024 01:35 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி, 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கோ ஆப்டெக்ஸில் அசல் ஜரிகையுடன் கூடிய, காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டு புடவைகள், சேலம், தஞ்சாவூர் பட்டு புடவைகள் மற்றும் பல்வேறு வகை புடவை வகைகளுடன், சட்டைகள், படுக்கை விரிப்புகள், உள்ளிட்டவை விற்பனைக்கு உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. கிருஷ்ணகிரி கோ - ஆப்டெக்ஸ்
விற்பனை நிலையத்திற்கு, 72 லட்சம், ஓசூர் விற்பனை நிலையத்திற்கு, 98 லட்சம், ஓசூர் பழைய விற்பனை நிலையத்திற்கு, 40 லட்சம் ரூபாய் என, 2.10 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்றார். கோ -
ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் காங்கேயவேலு, கிருஷ்ணகிரி விற்பனை நிலைய மேலாளர் சிலம்பரசன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.