/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., - அ.தி.மு.க.,வில் பூத் கமிட்டிக்கு 'கவனிப்பு'
/
தி.மு.க., - அ.தி.மு.க.,வில் பூத் கமிட்டிக்கு 'கவனிப்பு'
தி.மு.க., - அ.தி.மு.க.,வில் பூத் கமிட்டிக்கு 'கவனிப்பு'
தி.மு.க., - அ.தி.மு.க.,வில் பூத் கமிட்டிக்கு 'கவனிப்பு'
ADDED : ஏப் 02, 2024 04:32 AM
அரூர்: தர்மபுரி தொகுதியில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு முதற்கட்ட 'கவனிப்பு' செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில் மணி, அ.தி.மு.க.,வில் அசோகன், பா.ம.க.,வில் சவுமியா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தில் மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டம் ஆகியவற்றிற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு கவனிப்பு செய்யப்பட்டது. அதேபோல், அ.தி.மு.க., தரப்பிலும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் பிரசாரத்திற்கு உடன் வருபவர்களுக்கு கவனிப்பு செய்யப்பட்டது. பா.ம.க.,வும் பிரசாரத்திற்கு வருபவர்கள் மற்றும் ஆரத்தி எடுத்தவர்களுக்கு 'கவனிப்பு' செய்தது.
இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில், பூத் கமிட்டிக்கு தலா, 5,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சில இடங்களில் முறையாக பிரித்து வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதே போல், தி.மு.க., சார்பிலும், பூத் கமிட்டிக்கு தலா, 5,000 ரூபாய் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இது முதற்கட்டம்தான் எனவும், வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக வழங்கப்படும் என, தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே சுவர்விளம்பரம் எழுத வழங்கப்பட்ட பணத்தை, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் முறையாக செலவிடவில்லை என, அக்கட்சியில் புகார் எழுந்துள்ளது.

